வாட்ஸ் ஆப் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்: காரணம் என்ன??

திங்கள், 30 மார்ச் 2020 (12:35 IST)
வாட்ஸ் ஆப் தனது வாடிக்கையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. 
 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் மற்றும் ஐடி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் இருந்து பணி புரிந்து வருகின்றனர். வீடுகளில் இருந்து பணிபுரிய பெரும்பாலாரோர் மொபைல் டேட்டாவையே பயன்படுத்தி வருகின்றனர்.
 
ஆனால் வீடுகளில் அடைந்துள்ள மற்ற மக்களும் மொபைல் டேட்டாவை பயன்படுத்தி பாடல்கள் கேட்டல், படம் பார்த்தல் என பொழுதை போக்கி வருகின்றனர். இதனால் டேட்டா வேகம் வெகுவாக குறைந்து வருவதாக மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் ஏற்கனவே தெரிவித்தன. 
 
இந்நிலையில் வாட்ஸ் ஆப் தனது வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேர அளவு குறைக்கப்பட்டுள்ளது. 30 வினாடிகளில் இருந்து 15 வினாடிகளாக அது குறைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் சர்வர் தங்குதடையின்றி இயங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், வாட்ஸ் ஆப் மூலம் போலி செய்திகள் எதுவும் பரவாமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்