விஷாலின் 'மார்க் ஆண்டனி' பட புதிய அப்டேட்!

செவ்வாய், 4 ஜூலை 2023 (17:34 IST)
நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் விஷால், எஸ். ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் வித்தியாசமான கெட்டபில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் ஏற்கனவே  ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் செப்டமபர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆகலாம் என தகவல் வெளியானது.

இந்த    நிலையில், நடிகர் விஷால் இன்று மார்க் ஆண்டனி படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு   இப்படம்  ரிலீஸ் ஆகும்  என்று  அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#MarkAntony Vinayagar chaturthi release da mamae @iam_SJSuryah Naa Ready Dha Varava?? pic.twitter.com/5NjfKawLLZ

— Vishal (@VishalKOfficial) July 4, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்