தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சினிமா துறைக்கு இதுவரை ஒரு நல்ல விஷயம் கூட செய்ததில்லை அஜித். அதுமட்டுமல்ல, சினிமாக்காரர்களின் நல்லது, கெட்டதுகளில் கூட அவர் கலந்து கொள்வதில்லை. விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவின் திருமணம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அஜித் வீட்டுக்கு நேரில் போய் அழைப்பு வைத்தார் விஷால். ஆனால், அவர் வரவில்லை. தற்போதைய, வருங்கால ‘சூப்பர் ஸ்டார்’களான ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் வந்து வாழ்த்தினர். அஜித் வரவேண்டாம்… அவர் மனைவியையாவது அனுப்பியிருக்கலாம் அல்லவா? அதையும் செய்யவில்லை. ஆனால், அவருக்காகத்தான் சிலைகள் செய்தும், பாலாபிஷேகம் செய்தும் ப்ளூ சட்டை மாறன்களைத் திட்டிக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.