மார்க் ஆண்டனி: ட்ராப் ஆனதா விஷால் – ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படம்?

வியாழன், 17 மார்ச் 2022 (17:46 IST)
விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் ட்ராப் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி  படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் விஷால். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என சமீபகாலமாக அப்டேட்கள் வந்து கொண்டிருந்தன. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்காக அமைக்கப்படும் செட்டில் இருந்து புகைப்படம் எடுத்து அதைப் பகிர்ந்திருந்தார்.

ஆனால் இப்போது அந்த படம் படப்பிடிப்பு முடியும் முன்னரே கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஏன் ட்ராப் செய்யப்பட்டது என்பது பற்றிய காரணங்கள் எதுவும் தெரியவரவில்ல. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் படக்குழுவால் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்