விஷாலின் ’வீரமே வாகை சூடும்’… அடுத்த கட்ட பணிகள் தொடக்கம்!

திங்கள், 6 செப்டம்பர் 2021 (16:30 IST)
விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விஷாலின் 31வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் மீண்டும் விஷால்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது.

இதையடுத்து விஷால் தனது அடுத்த படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏற்கனவே விஷாலின் எனிமி திரைப்படம் ரிலிஸுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்