நடிகர் விஷால் நடிப்பில் அவரது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ள படம் சக்ரா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படம் ரிலிஸாவதற்கு முன்னதாக பல தடைகளை சந்தித்து கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் சமாளித்து விஷால் படத்தை ரிலீஸ் செய்தார். அதனால் இந்த படம் ரிலீஸானதே விஷாலுக்கு மிகப்பெரிய சக்ஸஸ் என்று சொல்லப்பட்டது. ஆனால் ரிலீஸான படம் திரையரங்குகளில் வசூலில் சுணங்கியது.
கிட்டத்தட்ட 12 கோடிக்கு விற்கப்பட்ட தமிழக திரையரங்க உரிமை வசூலில் பாதியை கூட கொடுக்கவில்லையாம். இதனால் விஷால் விநியோகஸ்தர்களுக்கு 6.5 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் தொலைகாட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம் மற்றும் இந்தி டப்பிங் ரைட்ஸ் ஆகியவை மூலமாக விஷால் நஷ்டத்தை தவிர்த்து 23.5 கோடி வரை ஈட்டியுள்ளாராம். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் வட்டி செலவு எல்லாம் சேர்த்தால் 23 கோடி ரூபாய் வருகிறதாம். அதனால் தயாரிப்பாளரான விஷாலுக்கு வெறும் 50 லட்சம் ரூபாய்தான் லாபமாக வரும் என சொல்லபப்டுகிறது.