இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான் என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தங்கலான் ரிலீஸ் ஆகும் என முதலில் படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் இடையில் விக்ரம்முக்கு படப்பிடிப்பில் விபத்து நடந்து ஷூட்டிங் தடைபட்டதால் ரிலீஸ் மேலும் சில நாட்கள் தள்ளி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை படத்தின் தயாரிப்பாளரும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உறுதிப் படுத்தியுள்ளார்.