விக்ரம் பிரபு நடிக்கும் ‘அசுர குரு’

புதன், 14 பிப்ரவரி 2018 (11:34 IST)
விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு ‘அசுர குரு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் ‘பக்கா’ என்ற படத்தில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு. ‘நெருப்புடா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் நிக்கி கல்ரானி ஹீரோயினாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயினாக பிந்து மாதவி நடித்துள்ளார்.
 
இதைத் தொடர்ந்து தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் ‘துப்பாக்கி முனை’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்நிலையில், ‘அசுர குரு’ என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார் விக்ரம் பிரபு.
 
ராஜ்தீப் இயக்கும் இந்தப் படத்திற்கு, கணேஷ் ராகவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். நாளை (பிப்ரவரி 15) முதல் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்