தமிழில் மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது இவரது இயக்கத்தில் ”நட்சத்திரங்கள் நகர்கிறது” வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. விக்ரமின் கோப்ரா படமும் வெளியாகி ஓடி வருகிறது.
இந்நிலையில் அடுத்து விக்ரம், இயக்குனர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானாலும் எந்த வகையான கதையை விக்ரமுக்கு பா.ரஞ்சித் தயார் செய்துள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.