தீபாவளிக்கு விக்ரம் – ரஞ்சித் படத்தின் முதல் லுக் போஸ்டர்!

திங்கள், 17 அக்டோபர் 2022 (10:07 IST)
விக்ரம் நடித்த கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆன நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 18ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

முதல் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்க பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் 15 நாட்கள் ஆந்திராவில் நடக்க உள்ளது. இந்த படம் 19 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவின் கோலார் தங்க வயல் பகுதிகளில் நடந்த கதையைக் கொண்டு உருவாகிறது என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் முதல் லுக் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்