இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக கோப்ரா உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம், அதன் காரணமாக பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் இன்று நடக்கும் கோப்ரா இசை வெளியீட்டில் அவர் கலந்துகொள்வார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.