இந்நிலையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே விக்ரம் மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை விக்ரமும் உறுதிப் படுத்தியுள்ளார். பட ரிலீஸ் போது டிவிட்டர் ஸ்பேஸில் கோப்ரா படக்குழுவினருடன் நடந்த உரையாடலில் கலந்துகொண்ட விக்ரம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.