அதனை தொடர்ந்து அடுத்ததாக, இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதில் விஜய்சேதுபதி, ராஷிகண்ணா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இந்த படத்தின் மற்றொரு நாயகியாக நடிகை நிவேதா பேத்ராஜ் நடிக்கிறார். விஜயா புரடொக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இரட்டையர்கள் விவேக் சிவா - மெர்வின் சாலமன் இசையமைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், இந்த படத்திற்கு 'சங்கத்தமிழன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.