இன்னுமா தண்டனை கொடுக்கவில்லை?' - பொள்ளாச்சி வன்கொடுமை; விஜய் சேதுபதி ஆவேசம்!!!

ஞாயிறு, 24 மார்ச் 2019 (15:33 IST)
பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசை மூன்று நாள் காவலில் எடுத்து முடித்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸ், திருநாவுக்கரசு கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  இவ்விகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் புகார் சொல்லும் நாளில் திருநாவுக்கரசு பொள்ளாச்சியில் இல்லை என திடீர் வாதம் கிளம்பியுள்ளது. இதனால் வழக்கு திசை மாறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
 இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் பட விழாவில் பேசிய விஜய் சேதுபதி பொள்ளாச்சி விவகாரம் குறித்து பேசுகையில், ``இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னுமா தண்டனை கொடுக்கவில்லை. இதற்குள் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? ஒரு குழந்தைக்குக் கூட அது தவறு என்று தெரியும். இந்த சம்பவத்தில் சிலர் பெண்களைக் குறை கூறுகிறார்கள். அது மிகவும் தவறானது. அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை என்னால் பத்து விநாடிகள் கூடக் கேட்க முடியவில்லை. அதற்கே மனது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது" என வேதனைத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்