பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம், 'சீதக்காதி'. இந்தப் படத்தில், விஜய் சேதுபதி நாடக நடிகராக நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக, விஜய் சேதுபதி வயதான தோற்றத்துடன் வித்தியாசமான மேக்கப் செய்திருக்கிறார்.
ஆஸ்கர் விருது வென்ற மேக்கப் மேன் கெவின் ஹேன்லி, விஜய் சேதுபதியின் இந்த மேக்கப்பை வடிவமைத்திருக்கிறார். இந்த மேக்கப்புடன் விஜய்சேதுபதி தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படம், விஜய் சேதுபதியின் 15-ம் ஆண்டு திருமண நாளை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும், தியாகராஜன் குமாரராஜா எழுதிய பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இன்று மாலை படத்தின் இன்னொரு போஸ்டர் வெளியிடப்படும் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.