விடுதலை இரண்டாம் பாகத்துக்கு தேவையான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், 20 நாட்கள் மட்டுமே ஷூட் செய்ய வேண்டி உள்ளதாக பட ரிலீஸின் போது சொல்லப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் விடுதலை 2 ஆம் பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இப்போது கதையில் பல மாற்றங்களை இயக்குனர் வெற்றிமாறன் செய்துள்ளதாகவும், அதனால் 40 நாட்கள் வரை ஷூட்டிங் செல்ல வேண்டி உள்ளதாலும், படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படும் என சொல்லப்படுகிறது. அதனால் வாடிவாசல் தொடங்குவதும் தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.