பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ஜவான் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு 30 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியில் சில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ஆனால் அவற்றில் ஒன்று கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் இந்தி படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா என்ற ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது.