மருத்துவமனை திறப்பு விழாவில் கண் தானம் செய்த விஜய் சேதுபதி

திங்கள், 5 ஜூன் 2017 (20:51 IST)
மதுரை தனியார் மருத்துவமனையில் கலந்துக்கொண்ட விஜய் சேதுபதி தனது இரண்டு கண்களையும் தானம் செய்தார்.


 

 
மதுரை கே.கே.நகரில் தனியார் மருத்துவமனையின் இரண்டாவது கிளை திறப்பு விழா இன்று நடைப்பெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கே.வி.ஆனந்த் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் விஜய் சேதுபதி தனது இரண்டு கண்களையும் தானம் செய்தார்.
 
இதையடுத்து விழாவில் பேசிய விஜய் சேதுபதி கூறியதாவது:-
 
நமது உடம்புக்கு ஒன்றென்றால் கடவுள் மற்றும் மருத்துவர், இந்த இருவரையும் நமது வாழ்க்கையில் நம்புகிறோம். நம் உடலின் முக்கிய அங்கமாகத் திகழும் கண்ணைக் காக்கவும், ஏழை மக்களுக்கு இந்த சேவையை இலவசமாக செய்வதற்கும் மருத்துவர்கள் முன்வர வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்