நடிகர் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் ரிலீஸ்?

வியாழன், 11 மார்ச் 2021 (20:53 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸான படம் மாஸ்டர்.

இப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள ’விஜய் 65’ படத்தை  நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. இப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதற்கடுத்து விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ’விஜய் 66’ படத்தை அதே ஆண்டு ஏப்ரலில்வெளியிட் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. அதேபோல், ’விஜய் 67’ படமும் ஆண்டின் இறுதியில் கிருஸ்துமஸிக்கு வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இந்த இரு படங்களில் இயக்குநர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்