தமிழக பாஜக தலைவர் தமிழிசை அளித்த பேட்டியில், 'இப்போது எல்லோரும் அரசியல்குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.அதில் தவறில்லை.சினிமாவில் இருந்து வந்தவர்கள் மட்டும்தான் ஆட்சி அமைக்கிறார்கள் என்று கூறுவது தவறு. முதல்வராக இருந்தவர்களெல்லாம் நடித்தார்கள் என்பது போல் விஜய் பேசி உள்ளார். இதை ஏற்க முடியாது.
தமிழக அரசியல்வாதிகள் எல்லோரும் நல்லது செய்து இருக்கிறார்கள். இதுவரை இருந்ததமிழக முதல்வர்கள் நல்லதே செய்து ஆட்சி நடத்தி உள்ளனர். இனிதான் விஜய் போன்றஒருவர் சினிமாவில் இருந்து நல்லது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவரது படம்வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் அவரை பற்றி நாங்கள் பேசி, அவரது படத்தை ஓடவைக்க விரும்பவில்லை' இவ்வாறு தமிழிசை கூறினார்.