ஆனால், மத்திய, மாநில அரசுகள் வரியினை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தலாம் என்ற கருத்து பரவலாகக் கூறப்பட்டது. இதற்கேற்ப பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரி லிட்டருக்கு 1.50 ரூபாய் குறைக்கப்படுகிறது.
ஆனால், இந்த முடிவு மக்களுக்காகவா அல்லது தேர்தலுக்காகவா என அடுத்த கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. ஆம், இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் முக்கியமான மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.