அஜித்துக்கு மங்காத்தா.,.. சிம்புவுக்கு மாநாடு – வெங்கட்பிரபு கொடுத்த வாக்குறுதி!

செவ்வாய், 30 மார்ச் 2021 (16:55 IST)
அஜித்துக்கு எப்படி மங்காத்தா வெற்றிப்படமாக அமைந்ததோ அதுபோல சிம்புவுக்கு மாநாடு வெற்றிப்படமாக அமையும் என வெங்கட்பிரபு உறுதி அளித்துள்ளாராம்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள மாநாடு திரைப்படம்  விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளி விட்டு விட்டு நடந்ததால் ரிலிஸ் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் நீண்ட ஆண்டுகளாக ஹிட் படமே கொடுக்காத வெங்கட்பிரபு மற்றும் சிம்பு ஆகிய இருவருக்கும் இந்த படம் கம்பேக்காக அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையடுத்து இந்த படம் அஜித்துக்கு எப்படி மங்காத்தா வெற்றிப் படமாக அமைந்ததோ அதுபோல சிம்புவுக்கு மாநாடு என சொல்லும் அளவுக்கு வெற்றிபெறும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்