சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைக் காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டவர் வனிதா விஜயகுமார். அவருடனும் கருத்துவேறுபாடு ஏற்படவே அவரை விட்டுப் பிரிந்தார். இதையடுத்து , தனது யூடியுப் சேனல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தனது ரசிகர்களிடம் உறையாடி வந்தார் வனிதா.
பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பிறகு கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்பொது அவரைக் குறித்து பேசப்பட்டதற்காக கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இப்போது அவர் அனல்காற்று எனும் திரைப்படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் எனும் சீரியலில் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.