எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. இப்படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் சமீபத்தில் தெரிவித்தார். அதேபோல், புக் மை ஷோவில் இப்படத்தின் அதிகளவில் புக் செய்துள்ளனர்.
மேலும் வலிமை படக்குழுவினர் வெளிநாட்டில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்ததும் அடுத்த போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து, அடுத்த சாதனை நிகழ்த்த காத்திருக்கின்றனர்.