பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் அஜித் - உச்சகட்ட கோபத்தில் "வலிமை" இயக்குனர்!

செவ்வாய், 26 நவம்பர் 2019 (12:41 IST)
அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நேர்கொண்ட பார்வை பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில்  "வலிமை" படத்தில் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என கூறப்பட்டது. 
அண்மையில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. மேலும் , நவம்பர் முதல் வாரத்திலே வலிமை படப்பிடிப்பு  டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தது. கடந்த சில நாட்களாகவே அஜித் ரசிகர்கள் திருப்தி அடையும் வகையில் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் அஜித்தின் புதிய கெட்டப்புகளும் வெளியாகி ட்ரெண்டாகி வந்தது. அதனை உறுதிசெய்யப்படும் வகையில் அஜித் தாடியை முழுவதும் எடுத்துவிட்டு மீசையை இறக்கி விட்டு கொஞ்சம் நடுத்தரமான வயது தோற்றத்திலும்... கட்டான தோற்றத்தால் கருப்பு நிற முடியை வைத்து போலீஸ் கெட்டப்பில் தோற்றமளித்திருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் வலிமை படத்தில் அஜித் இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் எனவும் கூறி வந்தனர். 
 
ஆனால், தற்போது அதுபற்றிய உண்மை வெளிவந்துள்ளது. அதாவது அஜித் வலிமை பட கெட்டப்பில் ஏர்போர்ட்களில் வரும் போதும் போகும்போது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து தனது கெட்டப்பை கசிய விடுகிறாராம். இதனாலே வளர்ந்து வரும் படத்தின் இயக்குனர் எச். வினோத் இதை எப்படி அவரிடம் சொல்வது என்ற சங்கடத்தில் இருந்து வருகிறாராம். இதுவரை அஜித்திற்கு மூன்று கெட்டப் போடப்பட்டு அது அத்தனையும் லீக்காகி விட்டது. எனவே இதில் அஜித் இரண்டு ரோல் நடிக்கிறார் என்று கூறப்பட்டதெல்லாம் ரசிகர்களின் யூகம் மட்டுமே என்பது தற்போது தெரியவந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்