அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘ மிஷ்கின் இந்த கதையை சொன்னபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் கண் தெரியாதவனாக நடித்தால் படம் ஓடாது என அனைவரும் சொன்னார்கள். ஆனால் படத்தை மிஷ்கின் அருமையாக எடுத்துள்ளார். ஆனால் படத்தில் ராஜ்குமாரை ஹீரோவாக்கி விட்டு என்னை டம்மியாக்கிவிட்டார்.’ என சிரித்துக் கொண்டே பேசினார்.