மேலும், சதீஷ், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், பாப்ரி கோஷ், அபர்ணா வினோத், ஹரிஷ் உத்தமன், ஆடுகளம் நரேன், விஜய் ராகவன், ‘மைம்’ கோபி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் சைக்கிள் ரிக்ஷாவில் கோட் அணிந்து நின்றபடியும், அமர்ந்தபடியும் விஜய் இருக்கும் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் பஞ்ச் டயலாக் இருக்கக்கூடாது என்று இயக்குனரிடம் விஜய் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து இப்படத்தில் விஜய் கிராமத்து இளைஞர் மற்றும் மெடிக்கல் கல்லூரி மாணவர் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் விஜய் ஒரு பாடல் பாடவுள்ளாதாகவும், அதனை விரைவில் ஒலிப்பதிவு செய்யவுள்ளனர்.