கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் என்பதை ஒருசிலர் சிறைவாசம் கருதி அஞ்சி நடுங்குகின்றனர். தனிமைப்படுத்துதல் என்பது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காகவும், அவர்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களையும் பாதிக்காமல் இருப்பதற்கும் என இன்னும் பலருக்கு புரிவதில்லை.
கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 என்ற வைரஸ் மிக சீக்கிரமாக பரவக்கூடிய ஒரு வைரஸ். வெளியூர் அல்லது வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு சமீபத்தில் வந்தவர்கள் தயவு செய்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தனிமைப்படுத்தல் என்பது உங்களை உங்களை இன்சல்ட் செய்யவோ அல்லது டார்ச்சர் செய்யவோ அல்ல. இது முழுக்க முழுக்க உங்களுடைய பாதுகாப்புக்காக தான். உங்கள் குடும்பத்தினர்களின் பாதுகாப்புக்காக குறிப்பாக உங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் பாதுகாப்புக்காக தான்