அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்ட ராஜு என்பவர் அளித்த பேட்டியில் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது பிரபல நடிகைகள் விருந்தாக்கப்பட்டதாக கூறியிருந்தார். குறிப்பாக அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலம் என்பவர் ஒரு குறிப்பிட்ட நடிகையை தான் வேண்டும் என்று அவர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் மற்றவருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கு கீழ்த்தரமான மற்றும் கேவலமாக இறங்கும் மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது