க்யூப், யு.எஃப்.ஓ. போன்ற டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால், புதிய படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் எப்போது முடியும் எனவும் தெரியவில்லை.
இந்நிலையில், இந்த நிறுவனங்களுக்குப் பதிலாக ஏரோக்ஸ் என்ற நிறுவனத்துடன் நேற்று ஒப்பந்தம் போட்டுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். டிசிஐ அப்ரூவல் பெற்ற இந்த நிறுவனம், மற்ற டிஜிட்டல் நிறுவனங்களைவிட 50% குறைவாக கட்டணம் வாங்கிறார்களாம். சிறிய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்கிறார்கள்.