பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் தயாரிப்பில் உருவாகிவரும் அந்தகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை தியாகராஜனே இயக்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தியாகராஜன் பிரசாந்தின் திருமனம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அந்தகன் படம் ரிலிஸாகி முடிந்ததும் பிரசாந்துக்கு திருமணம் நடக்கும் எனக் கூறியுள்ளார். 90 களில் சாக்லேட் பாயாக வலம்வந்த பிரசாந்த், இப்போது படங்களில் நடிப்பது குறைந்துள்ளது. அப்படியே நடித்தாலும், அவர்களின் சொந்த கம்பெனி படத்திலேயே நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தியில் வெளியாகி ஹிட்டான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகனில் அவர் நடித்துள்ள நிலையில் அந்த படம் வெற்றி பெற்று மீண்டும் பிசியான நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.