“இன்றைய தலைமுறைக்கு கல்வி என்ற பெயரில் எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறோம். அதனால், அவர்கள் என்ன மாதிரியான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், அவர்களின் உளவியல் மாற்றம் என்ன, வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுக்கப் போகிறேன். இந்தப் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.