தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்த இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் திரைக்கு வந்துள்ளது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை என்.ஜி.கே பூர்த்தியடைய செய்யாமல் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.
அதாவது என்.ஜி.கே. படத்துக்கான பெரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. நீங்கள் காட்டியுள்ள அன்பு, அற்புதமானது. உங்களில் சிலர் யூகித்ததைப் போல், ‘என்.ஜி.கே’ கதாபாத்திரத்தில் நிறைய அடுக்குகள், ரகசியங்கள் மறைந்துள்ளது. படத்தை உன்னிப்பாகப் பார்க்கும்போது அவற்றை எளிதில் கண்டுகொள்ளலாம். குடும்பம் மற்றும் நண்பர்களோடு படத்தை ரசியுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
செல்வராகவனின் ட்விட்டிற்கு ரிப்ளை செய்த ரசிகர்கள் படத்தில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை பதிவிட்டுள்ளனர். அதில் முதல் பாதியில் சூர்யா நல்லவராகவும் இரண்டாம் பாதியில் கெட்டவராகவும் மாறிவிடுகிறார் என்றும், அவரது பெற்றோர் மற்றும் மனைவியை தனது அரசியல் காரணத்திற்காக கொன்று விடுகிறார். ஆனால், ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவியை காப்பாற்றி விடுகிறார். மேலும், NGK பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யா சேகுவேரா கெட்டப்பில் இருந்தார். அந்த ரெபரென்ஸ் தான் படத்தில் சேகுவேராவை போன்று சூர்யா இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் ஒரு போராளியாக இயற்கை இவ்வாறு பல தகவல்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.