"வீரமாதேவி" படத்தில் இருந்து சன்னிலியோனை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி!

வியாழன், 1 நவம்பர் 2018 (15:50 IST)
மதுரை செல்லூரைச் சேர்ந்த சரவணன் என்பவர், பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோனை, வீரமாதேவி படத்தில் இருந்து நீக்ககோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.
 
சரவணன்  தாக்கல் செய்த மனுவில். முதலாவது ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி ஒரு சிறந்த பெண் போர் வீரர். கணவரின் இறப்புக்கு பிறகு வீரமாதேவி,  சதி எனும் உடன்கட்டை ஏறினார். என்பது தான் வரலாறு இதை சித்தரிக்கும் வகையில் வீரமாதேவி என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
 
இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடா மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. இந்தப்படத்தில் வீரமாதேவி கதாபாத்திரத்தில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடித்துள்ளார். 
 
அவரின் கவர்ச்சி படங்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றன.
இவர் இப்படத்தில் வீரமாதேவியாக நடிப்பது வீரமாதேவியை அவமானம் படுத்துவதாகும். இவர்களுக்கு தமிழகத்தில் பல இடங்களில் கோயில்கள் கட்டி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
 
இப்படத்தில் சன்னிலியோன் நடிக்கக்கூடாது என்று கர்நாடகாவில் போராட்டங்களும் நடத்தப்பட்டனர். அதுமட்டும் இன்றி, பலர் காவல் நிலையத்தில் புகார்களும் அளித்தனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் சன்னிலியோன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
எனவே சன்னிலியோனை வீரமாதேவி படத்தில் இருந்து நீக்கவும், இத்துடன் படப்பிடிப்பை நிறுத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் மனுவை பொதுநல வழக்காக ஏற்றி கொள்ள முடியாது என்றனர். இதையடுத்து மனுதாரர் மனுவை வாபஸ் பெறுவதாக கூறியதால், மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்