பால்வுட்டில் அவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவரைக் கதாநாயகியாக வைத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வீராமதேவி எனும் படம் உருவாகிவருகிறது. வீராமாதேவி படத்தில் முதலாம் ராஜெந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் குதிரைச் சண்ட, வாள் சண்டை போன்றவற்றில் பயிற்சி எடுத்து வருகிறார்.
இராஜேந்திர சோழனையும் அவரது மனைவியையும் மக்கள் பல இடங்களில் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அதனால் ஆபாசப் பட நடிகையான சன்னி லியோனி அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது அவருக்கு செய்யும் அவமானமாகும். என்வே அவரை அந்த படத்தில் இருந்து நீக்கவேண்டும் எனக் கர்நாடகாவில் சிலர் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நடிகர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் உரிமை அச்வர்களுக்கு உள்ளது. எனவே இந்த மனுவை பொதுநல மனுவாக ஏற்கமுடியாது எனக் கூறினர்.