விஜய்க்காக உயிரை கொடுத்த ரசிகன் - குடும்பத்தினர் கதறல்
சனி, 10 நவம்பர் 2018 (19:41 IST)
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் அடுக்கடுக்கான பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்தாலும் வசூலில் பட்டய கிளப்பியது. இதனால் விஜய்யை விட விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியானார்கள்.
இந்நிலையில் அண்மையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் குமார் (18), சக்தி (18) இருவரும் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
சர்கார் படம் இரவு காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி பலமாக மோதி விபத்து ஏற்பட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர் ஒப்படைத்தனர். இதனால் இருவரின் குடும்பத்தினரும் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.