நாங்க வழுக்கி விழுந்துட்டோம்... நடுக்கடலில் சாகசம் செய்த ஹன்சிகா!

புதன், 16 டிசம்பர் 2020 (10:09 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
 
பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியடீ படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது. பப்ளி லுக்கில் கொழு கொழுன்னு இருந்த தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி ஹாட் போடோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
 
அந்த வகையில் தற்போது மாலத்தீவு கடற்கரையில் கவலைகள் மறந்து ஜாலியாக சுற்றித்திருந்து அங்கிருந்தபடியே சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நடுக்கடலில் விமானத்தின் படிக்கட்டில் பறந்தபடி கவர்ச்சியை தூக்கலாக காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். இதில் ஹன்சிகாவின்  சாகசத்தை விட அவரது கவர்ச்சி போஸ் தான் ஆளை மயக்கியுள்ளது. 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்