வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்துக்குள் உதவிய பினராயி விஜயன் - கமல் நன்றி

வியாழன், 29 நவம்பர் 2018 (12:09 IST)
கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை , மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போல் கடந்து சென்று இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும் பல இடங்களில் மின்சாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை.

மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை தொலைத்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று  வழிதெரியாமல் அல்லல் பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள், திரையுலக பிரமுகர்கள் , அரசியல் தலைவர்கள் உதவிகளை வழங்கி வருகிறார்கள். 
 
பெருவெள்ளத்தில் கேரளா பாதிக்கப்பட்ட போது தமிழகம் பெரும் உதவிகளை செய்தது. இப்போது கேரளா, தமிழகத்துக்கு 10 கோடி ரூபாய் புயல் நிவாரண நிதியாக அறிவித்துள்ளது.
 
இதை தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ10 கோடி நிவாரண நிதி அளித்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
 
 இதுதொடர்பாக தமது ட்விட்டரில், “வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு” என கமல் பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்