இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான் திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது கலந்துகொண்டு பேசிய நடிகை பார்வதி “அரசியல் அற்றது என்று எதுவுமே இல்லை. மிகவும் தனிப்பட்ட விஷயங்களைப் பேசினாலும் அது அரசியல்தான். கலை என்பது அரசியல்தான். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாவது தற்செயல் ஆனது இல்லை. நாம் தொடர்ந்து ஏன் ஒடுக்குமுறை சமத்துவமின்மையும் இருக்கிறது என்பது பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்காக ரஞ்சித் ஒரு ராணுவத்தை உருவாக்கியுள்ளார். அதில் நான் படைவீரராக இருப்பதில் பெருமைப் படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.