தளபதி விஜய், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்றும், அந்த திரைப்படம் தற்போது ’தளபதி 64’ என்று அழைக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாகவும், கல்லூரி பேராசிரியருக்கு மாணவர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனை தான் இந்த படத்தின் மூலக்கதை என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது அதில் வரும் காட்சிகள் மற்றும் வசனங்களை கவனித்த தளபதி விஜய், இந்தப் படத்தின் வசனங்களும் ஒரு சில காட்சிகளும் கமல்ஹாசன் நடித்த ’நம்மவர்’ படத்தின் சாயல் போல் இருப்பதை இயக்குனரிடம் தெரிவித்திருக்கின்றார்
இதனை அடுத்து கமல் அலுவலகம் சென்று இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் பேசியதாகவும், அப்போது லோகேஷ் கனகராஜ் திறமையை பார்த்து பாராட்டிய கமலஹாசன், தனது நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது