6 மாதமாக வேலை இல்லை…. தற்கொலை செய்து கொண்ட தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்!

வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (09:29 IST)
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த தாஸ் என்பவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

40 வயதாகும் தாஸ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்துள்ளன. சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்துள்ளார் தாஸ்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக அவரது வேலை பறிபோயுள்ளது. இதனால் அவர் வீட்டு செலவுக்கும், குழந்தைகளின் கல்வி செலவுக்கும் பணம் இல்லாமல் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள தன் அறையில் அவர் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது தொலைக்காட்சி உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்