இந்நிலையில் கொரோனா ஊரடங்கினாள் பிரபலங்கள் பலரும் தங்களது வேலைகளை தாங்களே செய்வது தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வ்ருகிறார். வீடு கூடுதல், தோட்ட வேலை செய்தல், பாத்திரம் கழுவுதல், உடற்ப்பயிற்சி செய்தல் உள்ளிட்ட வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகை தமன்னா கடந்த சில நாட்களாகவே சமையல் செய்வது, ஒர்க் அவுட் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்து வருகின்றார்.
இதற்கிடையில் அடிக்கடி வெளியில் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் தான் காட்டிற்குள் மலை ஏற செல்வதாக கூறி பேக் மாட்டிக்கொண்டு ஜாலியாக செல்லும் புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்ப்போது அருவில் படுத்து ஆனந்த குளியல் போட்ட புகைப்படத்தை வெளியிட்டு "இயற்கையிடம் சரணடைந்து ஒவ்வொரு தேவையின் முழுமையையும் கண்டறியுங்கள். இந்த #WorldNatureConservationDay நாளில் நம்மை கவனித்துக்கொள்வதைப் போலவே இயற்கையையும் கவனித்துக்கொள்வோம் என்று உறுதியளிப்போம் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு முதல் ஆளாக நடிகை சமந்தா " அமேஸிங் " என கமெண்ட் செய்து பாராட்டியுள்ளார்.