ஆனால் அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக, நம்பி மீது கடந்த 1994-ல் வழக்குத் தொடரப்பட்டு, கைதுசெய்யப்பட்டார். பின்னாளில் வழக்கு விசாரணைக்கு வர, நம்பி குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்து 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
பிறகு விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்தித்த கேரளா முதல்வா் பினராயி விஜயன் அவரிடம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தற்போது, இவரின் கதையை 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படமாக்க இருக்கின்றனர்.
அதற்கு பதிலளித்திருந்த நடிகர் சூர்யா, "இது ரொம்ப அற்புதமானது. இந்த கனவு திரைப்படத்தில் பங்கெடுத்திருப்பது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம் மனம் சொல்வதை செய்வோம்" என பதிவிட்டிருந்தார்.