சூர்யா, கார்த்தி படங்களின் முக்கிய அப்டேட் ….’’சூரரைப் போற்று’’ பட டிரைலர் , ’’சுல்தான்’’ பட ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்…

திங்கள், 26 அக்டோபர் 2020 (09:18 IST)
சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தை வெளியிட தடையில்லாச் சான்று பெறுவதில் தாமதம்  ஆன நிலையில் இன்று சூரரைப் போற்று படத்திற்கு தடையில்லாச் சான்று பெற்றுள்ளனர்.
 
இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று இப்படத்தின் டிரைலவர், அக்டோபர் 26 (இன்று )காலை 10 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
 
இதனால் சூர்யாவின் ரசிகர்கள் #SooraraiPottruTrailer என்ற ஹேஸ்டேக் உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டிங் செய்து  வருகின்றனர்.
 
அதேபோல் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பில் உருவாகி வந்த ’சுல்தான்’ திரைப்படம் கடந்த 3 ஆண்டுகளாக தாமதமான நிலையில் சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
 
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 26 ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். 
 
மேலும் கொரோனா விடுமுறையில் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளும் 90% முடிந்துவிட்டது என தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்திற்கு இந்த படம் சென்றுள்ளது .
 
எனவே சூர்யாவின் சூரரைப் போற்று பட டிரைலரும் கார்த்தியின் சுல்தான் பட ஃபர்ட்லுக் போஸ்டர் வெளியாவதால் இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்