சூர்யா தற்போது சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் லாக்டவுன் முடிந்ததும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அடுத்ததாக சூர்யா வெற்றிமாறன், ஹரி மற்றும் பாண்டிராஜ் ஆகியோரிடம் கதை கேட்டு ஓகே சொல்லி வைத்துள்ளார். இதில் எந்த படத்தில் முதலில் நடிப்பார் எனத் தெரியவில்லை. இந்நிலையில் 24 பட இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த படம் 24 படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது.