இந்த போட்டோவில் இருக்கும் லெஜெண்ட் யார் தெரியுமா? சொன்னால் செம சாக் ஆகிடுவீங்க!

செவ்வாய், 16 மே 2023 (13:50 IST)
இந்திய சினிமாவில் பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் , தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார். இதுவரை 16 இந்திய மொழிகளில் 40,000 இற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். 
 
இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார். இருந்தும் இன்னும் பலநூறு தலைமுறைக்கு அவரது பாடல்கள் அடுத்ததடுத்த தலைமுறையினரை மகிழ்ச்சிப்படுத்தும். இந்நிலையில் தற்போது எஸ்பிபியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம எஸ்பிபியா இது? பெண் பிள்ளை தோற்றத்தில் இம்புட்டு அழகா இருக்காரே என லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்