அந்த வீடியோவில் சமந்தாவின் பயணம் அற்புதமானது என்றும், அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களை பார்த்தாலே அது உண்மை என தெரியும் என்றும் , அவருடைய படங்கள் அனைத்தும் சிறப்பானவை என்றும் கூறியுள்ளார்.
மேலும் நாக சைதன்யா மிகவும் அமைதியானவர், நிதானம், கண்ணியம் உடையவர் அவருக்கு எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்திருந்தார். சோபிதா இந்த வீடியோவை வெளியிடும்போது நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் தம்பதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.