எனக்கு உங்கள் படத்தைப் போட்டுக் காட்டினார்கள்… சரத்குமாரை பாராட்டிய சோனு சூட்!

வியாழன், 5 நவம்பர் 2020 (10:46 IST)
நடிகர் சரத்குமார் சோனு சூட்டுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரைப் பாராட்டியுள்ளார்.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் வேலையில்லாத தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளார் வில்லன் நடிகர் சோனு சூட். கடந்த 6 மாதங்களாக அவர் செய்த சேவையால் சினிமா நடிகர்கள் மத்தியிலேயே கூட அவருக்கு மரியாதை அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் சோனு சூட் பற்றி குறிப்பிட்டு ‘காலை 5.30 மணிக்கு ஜிம்முக்கு செல்வது போன்ற ஒன்றுக்கு எதுவும் ஈடாகாது. நீண்ட நாட்களுக்குப் பின் என் அருமை நண்பர் சோனு சூட்டை சந்தித்தேன். அவர் சமீபகாலமாக செய்த உதவிகளை பாராட்டினேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சோனு சூட் ‘நான் விஜயகாந்த் படத்தில் வில்லனாக அறிமுகமான போது கேப்டன் பிரபாகரன் படத்தைப் போட்டுக்காட்டி வில்லன் கதாபாத்திரத்துக்கு உங்கள் ரோலை முன்னுதாரணமாக சொன்னார்கள்’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்