பாடகர் எஸ்.பி.பியின் பாடல் இணையதளத்தில் வைரல் !

வெள்ளி, 4 ஜூன் 2021 (17:35 IST)
இந்திய சினிமாவில் முன்னணிப் பாடகராகவும், நடிகராகவும் டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும் கோலோட்சியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சினிமாவில் பின்னணிப் பாடலுக்கு பல்வேறு விருதுகள், பரிசுகள் பெற்று மக்கள் மனங்களில் இருந்து, தம் பாடலின் மூலமாக இன்றும் வாழ்ந்துவரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்தநாள் இன்று( ஜூன் 4 ) கொண்டாடப்படுகிறது. எனவே அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை தற்போது டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு பதிவிட்டுள்ளார். அதில், எஸ்.பி.பி பாடிய காத்தாடி மேகம் என்ற பாடலை இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன் இசையில் பாடியுள்ளார். இப்பாடலை குட்டிரேவதி எழுதியுள்ளார்.

இப்பாடல் ஸ்டார் மியூசிக் இந்தியா யூடியூப் சேனல் பக்கத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்