இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் பிஸியாகியுள்ளார் சிம்பு. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். முதன்முறையாக கௌதம் கார்த்திக், சிம்பு இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த படத்துக்கான காட்சிகள் ஏற்கனவே கொஞ்சம் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது அந்த காட்சிகளை போட்டு பார்த்த இயக்குனர் கிருஷ்ணா ஏற்கனவே படமாக்கிய காட்சிகளில் சிம்பு குண்டாக இருப்பதாகவும், இப்போது மிகவும் ஒல்லியாக இருப்பதால் ஏற்கனவே எடுத்த காட்சிகளை பயன்படுத்த முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் மீண்டும் பழைய காட்சிகளையும் புதிதாக படம் பிடிக்க வேண்டி இருப்பதால் தயாரிப்பாளருக்கு செலவு இரட்டிப்பு ஆக உள்ளதாம்.